30 Jan 2016

வடகிழக்கில் வாழுகின்ற மக்கள், மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், வறுமையின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் - நடராசா (வீடியோ)

SHARE
வடகிழக்கில் வாழுகின்ற மக்கள், மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், வறுமையின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களாகவுள்ள எமக்கு இவ்வருடம் மத்திய அரசு 2.8 மில்லியன்களை மாத்திரம்தான் ஒரு உறுப்பினருக்குரிய பன்முகப்படுத்தப் பட்ட நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிகின்றோம்.
எனவே தற்போதைய காலகட்டத்தில் பாதிப்புற்றுள்ள நிலையில் வாழும் எமது மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு 2.8 மில்லியனை வைத்துக் கொண்டு எவ்வாறு அபிவிருத்தி செய்வது என கேள்வி எழுப்புகின்றார் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் துருணு சிரம சக்தி செயற்றிட்டத்தின் கிழ் 250000 ரூபாய் செலவில் புணரமைக்கப்பட்ட மட்டக்களப்பு – எருவில் கிராமத்திலுள்ள பொது நூலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வு வெள்ளிக் கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…

SHARE

Author: verified_user

0 Comments: