14 Sept 2015

யுத்தத்தினால் நலிவடைந்து காணப்படும் மக்களின் முன்னேற்றத்திற்கு உதவ வேண்டிய கடப்பாடு கிழக்கு மாகாணசபைக்கு உள்ளது – பிரசன்னா

SHARE
கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளுராட்சி மன்றங்களுக்கு மேற்கொண்டுள்ள கள விஜயங்களை முன்மாதிரியாகக் கொண்டு கிழக்கு மாகாணசபையிலுள்ள ஏனைய அமைச்சர்களும், செயற்பட வேண்டும். இதனூடாகத்தான் யுத்தத்தில் நலிவடைந்துள்ள மக்களை மேலோங்கிக் கொண்டு வரமுடியும். எனவே அனைவரும் எமது மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும். என கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில், மாகாணசபை உறுப்பினர்கள், மாகாண அதிகாரிகள் அடங்கிய, குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு கள விஜயங்களை மேற்கொண்டு அங்குள்ள குறை நிறைகள் பற்றி ஆராய்ந்து வருகின்றனர் இச்செயற்பாடு பற்றி  கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமாரிடம், இன்று தொடர்பு கொண்டு கேட்டிபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலுலம் கருத்து தெரிவிக்கையில்…..

தற்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் கடந்த வாரம் முதல் மட்டக்களப்பு மாட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு கள விஜயங்களை மேற்கொண்டு அங்குள்ள குறை, நிறைகள் பற்றி ஆராய்ந்து வருகின்றனர். 

கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சருடன் சேர்த்து 5 அமைச்சர்கள் உள்ளார்கள் ஆனாலும், முதலமைச்சரின் கீழ் வருகின்ற திணைக்களங்களுக்கு முதலமைச்சர் தலைமையில் உரிய உள்ளுராட்சி மன்றங்களுக்கு கள விஜயங்களை மேற்கொண்டு அங்குள்ள குறை நிறைகள் பற்றிக் கேட்டறித்து  அக்குழுவினர் உள்ளுராட்சி சபைகளில் காணப்படுத்தி குறைபாடுகளை ஒருமாத காலத்திற்கு நிவர்தி செய்து தரப்படும் எனவும், உறுதியளித்துச் செல்கின்றனர். இவ்வாறான விடையங்கள் பாராட்டப்பட வேண்டியவைகளாகும்.

ஆனாலும், கிழக்கு மாகாணத்திலுள்ள ஏனைய 4 அமைச்சுக்களின் கீழ் வருகின்ற திணைக்களங்களுக்கும் அந்த, அந்த உரிய அமைச்சரிகளின் தலைமையிலான குழுவினர்கள் களவிஜயங்களளை மேற்கொண்டு அந்த, அந்த உரிய திணைக்களங்களிலும் காணப்படும் குறை நிறைகளை ஆராய்ந்து குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொண்டுக்க வேண்டும். 

இது கிழக்கு மாகாணத்தில் அமைச்சுப் பெறுப்புக்களை ஏற்றுக் கொண்டு சேவை செய்கின்ற அனைத்து அமைச்சர்களினதும் தலையாய கடமையாகும். இவ்வாறு அரசியல்வாதிகள், அதிகாரிகள், அடங்கிய குழுவினர்கள் திணைக்களங்களுக்கு விஜயங்களை மேற்கொள்கின்றபோது மிகவிரைவில் கிழக்கு மாகாணமும் பாரிய அபிவிருத்தியை நோக்கி முன்னேறிச் செல்லும். 

கடந்த காலங்களில் ஏற்பட்ட யுத்தத்தினால் நலிவடைந்து காணப்படும் மக்களுக்களின் முன்னேற்றத்திற்கு உதவ வேண்டிய கடப்பாடு கிழக்கு மாகாணசபைக்கு உள்ளது. 

கிழக்கு மாகாண ஆளுகைக்குட்பட்ட மாகாண சபையின் கீழ் வருகின்ற அனைத்து விடையங்களுக்கும், பொறுப்பாகவுள்ள உரிய அமைச்சர்கள் மக்களின் குறைபாடுகளை நிவர்தி செய்ய மக்களின் காலடிக்குச் சென்று தீர்த்து வைக்க வேண்டும். 

கிழக்கில் தற்போதுள்ள முதலமைச்சர் மேற்கொண்டுள்ள கள விஜயங்களை முன்மாதிரியாகக் கொண்டு கிழக்கு மாகாணசபையிலுள்ள ஏனைய அமைச்சர்களும், செயற்பட வேண்டும். இதனூடாகத்தான் யுத்தத்தில் நலிவடைந்துள்ள மக்களை மேலோங்கிக் கொண்டு வரமுடியும். எனவே நாம் அனைவரும்; ஒன்றிணைந்து எமது மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: