4 Sept 2015

ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்

SHARE
ஈழத்து திருச்செந்தூர் என போற்றப்படும் மட்டக்களப்பு, திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்று காலை மட்டக்களப்பு அரசடியில் உள்ள சித்திவிக்னேஸ்வரர் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது.ஆலயத்தினை கொடிச்சீலை வந்தடைந்ததும் ஆலயத்தின் விசேட பூஜைகள் மற்றும் அபிசேக ஆராதனைகளும் நடைபெற்றன.
மட்டக்களப்பு இராமக்கிருஸ்ண மிசன் சுவாமி சதுர்புஜானந்தஜி மகராஜ் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கொடியேற்றி வருடாந்த உற்சவத்தினை ஆரம்பித்துவைத்தார்.
பத்து தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தில் தினமும் சுவாமி உள்வீதி வெளிவீதியுலா என்பன நடைபெறவுள்ளதுடன் எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை தேர்த்திருவிழாவும் சனிக்கிழமை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.
கிழக்கிலங்கையின் பெரும் பிரசித்திபெற்ற முருகன் ஆலயமாகவுள்ள இந்த ஆலயம் மகா துறவி ஓங்காரானந்தா சரஸ்வதி சுவாமிகளினால் ஸ்தாபிக்கப்பட்டதாகும்.
இந்தியாவின் புகழ்பூத்த முருகன் ஆலயமான திருச்செந்தூர் ஆலயத்தினை நோக்கியதாக இந்த ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும்.
SHARE

Author: verified_user

0 Comments: