17 Nov 2026

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பயனாளிகளுக்கு புதிய வீடுகள் வழங்கி வைப்பு.

SHARE

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  பயனாளிகளுக்கு புதிய வீடுகள் வழங்கி வைப்பு.

வீடற்றவர்களுக்கு நிரந்தர வீடுகளைப் அமைத்துக் கொடுக்கும் அழகான நாடு வளமான வாழ்க்கை எனும் செயற்றிட்டத்தின்கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வீட்டுத் திட்டங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில்  தொடர்ச்சியாக அமைத்து கொடுக்கப்பட்டு  வருகின்றன.

ஒரு வீட்டிற்கு தலா 10 இலெட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேவேளை மட்டக்களப்பு மாவட்டம்  மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 08 பயனாளிகளுக்கு புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு தேசிய வீடமைப்பு  மாவட்ட அதிகார சபையின் முகாமையாளர் ரி.சுபாஸ்கரன்  தலைமையில் செட்டிபாளையம், குருக்கள்மடம் தேற்றாதீவு, மாங்காடு, ஆகிய கிராமங்களில் திங்கட்கிழமை(16.11.2026) இடம்பெற்றது.

இந்த புதிய  வீடுகளை திறந்து வைத்து பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்விற்கு பிரதம அதிதியாக  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமான கந்தசாமி பிரபு கலந்து கொண்டு பயனாளிகளிடம் வீடுகளை வழங்கி வைத்தார். 

இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர், திட்டமிடல் பணிப்பாளர் அ.பிரபாகரன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட  உத்தியோகஸ்த்தர்கள், பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள், பனாளிகள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வீடமைப்புத் திட்டங்களுக்காக இவ்வாண்டு 455  மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வீடமைப்பு திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக இதன்போது தேசிய வீடமைப்பு  மாவட்ட அதிகார சபையின் முகாமையாளர் ரி.சுபாஸ்கரன் தெரிவித்தார்.












           

SHARE

Author: verified_user

0 Comments: