அனர்த்த முகாமைத்து அமைச்சினால் எல் நினோ தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை இனம் கண்டு தற்போது கிழக்கு கடற்கரை பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமை இதனால் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தை அடுத்து விசேட அனர்த்த முன்னாயத்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் வடகீழ் பருவப்பெயற்சி மழை மற்றும் திடீர் அனர்த்த முன்னாயத்தம் தொடர்பான கூட்டம் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன் போது மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பு கரையோர பிரதேசங்களிலுள்ள பொதுமக்களின் பாதுகாப்பு திடீர்மழை வீழ்ச்சி, காற்று, வெள்ளம் மாவட்டத்தில் உள்ள முக்கிய குளங்களின் நீர்மட்டத்தின் அளவு சுகாதாரத்தாரப்பினரின் மற்றும் முப்படையினரின் முன்னாயத்த செயற்பாடுகள் என பலதரப்பட்ட விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இதன்போது மாவட்டத்தின்
முப்படையின் உயர் அதிகாரிகள், வானிலை அவதான நிலையத்தின்
அதிகாரிகள், நீர்ப்பாசத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள்,
பிரதேச செயலாளர்கள்,
மாவட்ட செயலக
அனர்த்த முகாமைத்துவ உத்தியோகஸ்த்தர்கள், பிரதேச
சபைகளின் சுகாதாரத் தரப்பினர், என பலர் இந்த விசேட அனர்த்த
முகாமைத்துவ கலந்துரையாடலின் போது கலந்து
கொண்டிருந்தனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment