டித்வா புயலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகப்
பிரிவுக்குட்பட்ட பயனாளிகளுக்கான புதிய வீடுகள் கையளிப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த டித்வா புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புதிய வீடுகளை கையளிக்கும் நிகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறன.
இதேவேளை பெரிதும் பாதிக்கப்பட்ட கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரம்படிதீவு கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 4 வீடுகளை கையளிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை(26.11.2026) கிரான் பிரதேச பிரதேச செயலாளர் திருமதி.பி.நிருபா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான கந்தசாமி பிரபு கலந்து கொண்டு 50 லட்சம் ரூபா செலவில் நிருமாணிக்கப்பட்ட வீடுகளை திறந்து வைத்து பார்வையிட்டதுடன் பயனாளிகளிடம் அதனை வழங்கி வைத்தார்.
தாம் சொந்த வீடு இல்லாமல் கடந்த பல வருடங்களாக மிகுந்த கஷ்டப்பட்டோம், இதனைப் பெற்றுத் தந்த அரசாங்கத்திற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தாம் மிகுந்த நன்றியை தெரிவிப்பதாக இதன்போது பயனாளிகள் தெரிவித்தனர்.
இதன்போது கிரான் பிரதேச செயலகத்தின் உயர் அதிகாரிகள் ஊழியர்கள் அப்பகுதிக்கான பிரஜா சக்தி உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment