15 Nov 2026

ஈழமண் விடுதலைக்காய் இறுதிவரை உழைத்தவர் அமரர் சிவாஜிலிங்கம் - ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா.

SHARE

ஈழமண் விடுதலைக்காய் இறுதிவரை உழைத்தவர் அமரர் சிவாஜிலிங்கம் - ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா.

தமிழ் தேசியத்தின் உறுதியான கொள்கையை எப்போதுமே விடாப்பிடியாக தன் இதயத்தில் சுமந்து பல அச்சுறுத்தல்கள், கொலை மிரட்டல்கள், படையினரின் விசாரணைகள் என பலவிதமான ஆபத்துக்களை எல்லாம் எதிர்கொண்டு ஈழமண் விடுதலைக்காக அற்பணிப்புடன் உழைத்த ஒரு பெருமகனை நாம் இழந்துள்ளோம் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அமரர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களின் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. 

மறைந்த தமிழ் தேசிய ஆளுமை அரசியல் வாதியான எம்.கே.சிவாஜிலிங்கம் எப்போதும் இனவிடுதலைக்காகவே தடம்மாறாமல், சோரம் போகாமல் தமது பணிகளை இதய சுத்தியுடன் ஆற்றினார். 

1980, காலப்பகுதியில் ஆயுதப்போராட்ட இயக்கத்தில் தம்மை ஒரு போராளியாக இணைத்து செயல்பட்டு பின்னர் 2001 டிசம்பர் நாடாளுமன்றத் தேர்தலில் சிவாஜிங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில்போட்டியிட்டு வெற்றி பெற்று முதற்தடவையாக பாராளுமன்றம் சென்றார்.

ஒரு ஆயுதப்போராட்டத்தின் தம்மை விடுதலை வீரனாக இணைந்து தேர்தல் அரசியலில் தன்னை 2001, இல் தமிழ்தேசிய கூட்டமைப்பு மூலம் நாடாளுமன்றத்தில் பிரவேசித்து அன்றில் இருந்து இறக்கும் வரையும் மக்கள் பிரதிநிதிகளாக செயல்பட்டு மக்களுடன் மக்களுக்காய் களத்தில் நின்று செயல்பட்ட ஒரு வீர மறவனை நாம் இழந்துள்ளோம் அன்னாரின் பேரிழப்பு ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் ஒரு இடைவெளியை தந்துள்ளது. 

அன்னாரின் பிரிவால் ஏங்கி தவிக்கும் அன்பு மனைவி, சகோதரங்கள், குடுப்பத்தினர், உறவினர் அனைவருக்கும் எனது இதயபூர்வமான இரங்கலை மன வேதனையுடன் தெரிவிக்கின்றேன். என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.



SHARE

Author: verified_user

0 Comments: