12 Nov 2026

புதிய வரவு செலவு திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அபிவிருத்தி திட்டங்களுக்காக அதிகளவு நிதி ஒதுக்கீடு-பிரபு எம்.பி

SHARE

புதிய வரவு செலவு திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அபிவிருத்தி திட்டங்களுக்காக அதிகளவு நிதி ஒதுக்கீடு-பிரபு எம்.பி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் வீட்டு திட்டங்களை அமைப்பதற்காக அதிக நிதிகளை தொடர்ச்சியாக ஒதுக்கி வருவதுடன் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட உள்ள புதிய வரவு செலவுத் திட்டத்தில் மாவட்டத்தின் அடுத்த வருடத்திற்கான வீட்டு திட்டங்களை  அமைப்பதற்காகவும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை அடுத்த வருடத்தில் முன்னெடுப்பதற்காக  மாவட்டத்திற்கு விசேட நிதிகள்  ஒதுக்கப்பட உள்ளது.

என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். புதன்கிழமை(11.11.2026) மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்...

எதிர்க்கட்சியினர் பாராளுமன்ற சிறப்பு உரிமைகளை பயன்படுத்தி தொடர்ச்சியாக நாட்டை குழப்பம் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். முன்னாள் பிரதி பாதுகாப்பு அமைச்சர்கூட நாட்டின் சட்டங்களை மீறி ட்ரோன்களை இறக்குமதி செய்த சம்பந்தமாக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறன. 

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியும் தற்போது ஒன்றாக இணைந்து நாட்டை குழப்புகின்ற செயற்பட்டு வருகின்றனர். யாராக இருந்தாலும் சட்டத்திற்கு முரணாக செயற்பட்டிருந்தால்  அரசாங்கத்தினால் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். என அவர் இதன்போது தெரிவித்தார்.


 

SHARE

Author: verified_user

0 Comments: