6 Nov 2026

மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு மற்றுமொரு பேரிடி – மேச்சல்தரைப் பகுதியை சூழ்ந்துள்ள இராணுவத்தினர்.

SHARE

மயிலத்தமடு பண்ணையாளர்களுக்கு மற்றுமொரு பேரிடி – மேச்சல்தரைப் பகுதியை சூழ்ந்துள்ள இராணுவத்தினர்.

மைலத்தமடு, மாவனைப் பகுதியில் அமைந்துள்ள மேச்சல் தரைப் பகுதியை வர்த்தமானிப் பிரகடனம் செய்து சட்டபூர்வமான மேச்சல்தரையாக மாற்றித்தருமாறு கோரி மிக நீண்ட காலமாக போராடி வரும் அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் மத்தியில் மற்றுமொரு பேரிடி வீழ்ந்துள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

மயிலத்தமடு மற்றும் மாதவனைப் பகுதியில் இலங்கை இராணுவத்தினர் தற்போது பயிற்சிகளை மேற்கொண்டு வருவதனால் அப்பகுதியில் மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள் இராணுவ்தினரைக் கண்டதும் விரண்டு ஓட்டம் எடுக்கின்றன. இவ்வாறு இராணுவத்தினைக் கண்டு பயம் கொண்டு கால்நடைகள் காடுகளுக்குள் ஓடி ஒழிகின்றன. மேலும் இவ்வாறு ஓடுகின்ற கால்நடைகள் மேச்சல் தரைப் பகுதியில் அத்துமீறி பயிர் செய்கையில் ஈடுபட்டு வருகின்றவர்களின் பயிர்களுக்குள்ளும் செல்கின்றன. 

இதனால் மீ;டும் ஓர் இன வெறுப்புக்கள் உண்டு பண்ணக் கூடிய சூழல் ஏற்படுவதாக அப்பகுதி பண்ணையாளர்கள் அங்கலாய்க்கின்றனர். இராணுவத்தினரைக் கண்டு ஓட்டக் எடுக்கும் கால்நடைகளை, தற்போதைய மழையுனான காலநிலைக்கு மத்தியில்  தமது கால்நடைகளை கட்டுப்படுத்துவதென்பது மிகுந்த சிரமமாகவுள்ளது. எனவே மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர், உள்ளிட்ட சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இவ்விடையத்தில் கருத்திற் கொண்டு இராணுவத்தினரின் பயிற்சிகளை அங்கிருந்து வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு உடன் நடவடிக்கை எடுக்குமாறும் அப்பகுதி பண்ணையாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.











SHARE

Author: verified_user

0 Comments: