26 Nov 2026

போராட்டத்தை செய்வதற்குரிய அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் ஆட்சியாளர்கள். -ஸ்ரீநேசன் எம்.பி

SHARE

போராட்டத்தை செய்வதற்குரிய அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் ஆட்சியாளர்கள். -ஸ்ரீநேசன் எம்.பி

தமிழ் மக்களின் போராட்டம் விளையாட்டுக்காக, வேடிக்கைகளுக்காக, பகிடிகளுக்காக, ஆரம்பிக்கப்பட்ட ஒன்று அல்ல. இந்த போராட்டத்தை செய்வதற்குரிய அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் ஆட்சியாளர்கள். இந்த போராட்டத்துக்குரிய நியாயங்களை தந்து பிரச்சனைக்குரிய தீர்வுகளை முன்கூட்டியே தந்திருந்தால் 50,000 மாறவர்கள் தங்களுடைய உயிரை அர்ப்பணிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது.

 

என இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

 

புதன்கிழமை(25.11.2026) மட்டக்களப்பு சந்திவெளியில் நடைபெற்ற மாவீரர்களின் பெற்றோர்களுக்கு மதிப்பளிக்கு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்.

 

யுத்தம் மௌனிக்கப்பட்டு தற்போது 17 ஆண்டுகள் கடந்து இருக்கின்றன. ஆனாலும் தமிழ் மக்களுக்கு பிரச்சனை இருக்கின்றது என்பதை மறுக்கின்றார்கள். மயிலத்தமடு மாதவன் பிரச்சினையைக்கூட தீர்ப்பதற்கு அவர்கள் முன் வருகின்றார்கள் இல்லை.

 

எமது மக்களுக்கான உரிமையைப் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலமையில்தான் இருந்து கொண்டிருக்கின்றோம். எனவே மறுக்கப்பட்ட உரிமைகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்காகவும்தான் எமது மக்கள் இன்னுயிரை தியாகம் செய்திருக்கின்றார்கள்.

 

ஜே.வி.பி யினர்கூட றோகண விஜய வீரவின் தலைமையில் 1971, 1980 என இரண்டு கட்ட போராட்டங்களை நடத்தியிருந்தார்கள். அவர்களுக்கு அவர்களுடைய மக்களுக்குரிய உரிமைக்காக  போராடுவதற்கு உரிமை இருக்கிறது என்றால் எமது மக்களின் உரிமைகளுக்காகவும்,  போராடுவதற்கு உரிமை இருக்கின்றது. ஜே.வி.பி னர் கூட இதே கார்த்திகை மாதத்தில் அவருடைய வீரர்களை அனுஷ்டித்தார்கள் அதே போன்றுதான் இதே மாதத்தில் எமது வீரர்களுக்குரிய அஞ்சலியை நாங்கள் செலுத்துகின்றோம்

 

கடந்த காலத்தில் மரணித்தவர்களை வீரச்சாவடைந்தவர்களைகூட நாங்கள் அஞ்சலிக்க முடியாது என்று இறுக்கமான கொடுமையான நடவடிக்கைகள் காணப்பட்டன. இன்றைய நிலையில் கேவிபி இனருக்கும் அந்த வலி இருக்கின்றது என்றபடியால் அவர்கள் அந்த தினத்தை அனுஷ்டிக்கின்றபோது மற்றவர்களை அனுஷ்டிக்காமல் தடுப்பது என்பது பாரபட்சம் பக்க சார்பு என்ற அடிப்படையில் அவர்கள் இந்த விடயத்தை கண்டு கொள்ளாமல் விட்டிருக்கின்றார்கள்.

 

பயங்கரவாத தடைச் சட்டம் என்ற ஒரு சட்டம் வைத்திருக்கின்றார்கள் தற்காலிகமாக ஆறு மாதங்களுக்காக கொண்டுவரப்பட்ட அச்சட்டம் இன்று வரை 47 ஆண்டு காலமாகச் சட்டம் இருந்து கொண்டிருக்கிறது. அந்த சட்டத்தின்படி ஒருஅப்பாவியை கைது செய்தாலும்கூட  சித்தரவதை செய்து ஒப்புதல் வாக்குமூலம் பெறலாம்.

 

பயங்கரவாததடை சட்டத்தை அகற்றுகின்றோம் என்று சொல்லிவிட்டு தற்போது அரசாங்கத்தை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கின்ற என்ற ஒரு சட்டத்தை கொண்டு வருவதற்கு உள்ளார்கள், அதுபோல் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயல்களை கட்டுப்படுத்துவதற்காக என இன்னும் ஒரு சட்டத்தை கொண்டுவர இருக்கின்றார்கள் சட்டங்கள் கொண்டுவரப்படும்போது அது சாதாரணமாக அமைந்து விடும் அது அமுல்படுத்தப்படுகின்றபோதுதான் அதனுடைய கஷ்டங்கள் தெரியும்.

 

இதை மண்ணில் பிறப்பிலிருந்து நாங்கள் இன்று வரை வாழ்ந்து வருகின்றோம். யுத்தம் ஆரம்பித்த காலம் யுத்தம் முடிந்த காலம் வரைக்கும் நாங்கள் இந்த மண்ணில் வாழ்ந்து வருகின்றோம். இந்த மண்ணில் பட்ட வேதனைகள்ஈ கஷ்டங்கள், மரண என்பன எனக்குத் தெரியும். என அவர் இதன்போது அவர் தெரிவித்தார்.





 

SHARE

Author: verified_user

0 Comments: