12 Nov 2026

24 மில்லியன் ரூபா செலவில் மட்டு நகரில் புதிய உப தபாலகத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு.

SHARE

24 மில்லியன் ரூபா செலவில் மட்டு நகரில் புதிய உப தபாலகத்திற்கான அடிக்கல் நாட்டி வைப்பு.

கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ்  மட்டக்களப்பு மாவட்டத்தில் பொதுமக்களின் தகவல் தொடர்பாடல் வசதிகளை மேம்படுத்த தொடர்ச்சியாக அபிவிருத்தி திட்டங்கள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இதேவேளை மாவட்டத்தின் இந்த வருடத்தின்  மூன்றாவது 3 தபால் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு மாகாண தபால் திணைக்களத்தின் நிர்வாக இயக்குனர் ம.பிரகாஷ் தலைமையில் புதன்கிழமை(11.11.2026) இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவருமான கந்தசாமி பிரபு கலந்துகொண்டு மட்டு நகரில் நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த கோட்டை முனை பிரதேசத்திற்கான புதிய உப தபாலகத்திற்கான அடிகளினை நாட்டி வைத்தார். 

இதன்போது மட்டு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் மாநகர சபையின் உறுப்பினர்கள் மாவட்ட தபால் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பொதுமக்கள் என பலர்  கலந்து கொண்டிருந்தனர். 

கடந்த பல வருடங்களாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த இந்த தபால் நிலையத்தின் புதிய கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றதும்  புதிய சொந்த கட்டிடத்தில் இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









SHARE

Author: verified_user

0 Comments: