13 Aug 2026

தேசிய மக்கள் சக்தி அரசுக்கும் ஜனாதிபதிக்கும் புகழாரம் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் பிரதேச சபைத் தவிசாளர்.

SHARE

தேசிய மக்கள் சக்தி அரசுக்கும் ஜனாதிபதிக்கும் புகழாரம் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் பிரதேச சபைத் தவிசாளர்.

இந்த நாட்டின் கொள்கைகள் இந்த நாட்டின் சரியான சட்ட திட்டங்களுக்கு அமைய இந்த நாட்டின் ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சரியான முறையில் செயற்படுத்தப்படுகின்றன.  மண்முனை தென்னருவில் பற்றி பிரதேச சபையில் 2025 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் 12ஆம் திகதி இந்த பிரதேசத்திற்கு ஓர் தலைமை பீடமாக இந்த பிரதேச சபைக்கு தவிசாளராக தேர்ந்தெடுத்தமைக்காக இந்த பிரதேச மக்களுக்கு இந்த சந்தர்ப்பத்திலும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். 

என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தாச்சிமடத்தில் 27 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதிதாக நிருமானிக்கப்பட்ட ஆயுள்வேத வைத்தியசாலைக்கான விடுதி  புதன்கிழமை(12.08.2026) திறந்து வைக்கப்பட்து. இதன்போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்pட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் 

ஏனெனில் 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 600 மில்லியன் ரூபாய் வரவு செலவுத் திட்டத்தை எனது பிரதேச சபையில் நாங்கள் கொண்டு வந்திருந்தோம். அதில் சுமார் நூறு மில்லியன் ரூபாய் நிதியை நாம் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கீடு செய்திருக்கின்றோம்.

பெரியகல்லாரிலும், இதே போன்று ஓர் ஆயுள்வேத வைத்தியசாலை அமைந்துள்ளது. இப்பிரதேசத்தில் இருக்கின்ற இந்த ஆயுள்வேத வைத்தியசாலைகளுக்கு எமது பிரதேச சபையால் வருடத்திற்கு சுமார் பத்து மில்லியன் ரூபாய்க்கு பெறுமதியான மருந்துகளை நாங்கள் வழங்குகின்றோம். இந்த சேவையை நாம் நேரடியாகவே கிழக்குமாகாண ஆளுநர் ஊடாக இந்த ஓந்தாச்சிமடம் ஆயுள்வேத வைத்தியசாலைக்கு நாம் ஒப்படைக்கின்றோம்.

ஏனெனில் சிறந்த ஒரு ஆயுள்வேத மருத்துவ சேவையினை ஓந்தாச்சிமடம் வைத்தியசாலை வழங்குவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றது. இலங்கையில் முதன் முதலாக இலத்திரனியல்  ஆயுள்வேத வைத்தியசாலையாக இந்த ஆயுள்வேத வைத்தியசாலை செயற்படுகின்றது. சாதாரணமாக 10 மில்லியன் ரூபாய் நிதி ஒரு பிரதேச சபையினால் வழங்கப்படுகின்ற பணம் சிதைந்து போகின்றது. அதனை சரியான முறையில் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும். அதனை நாம் இந்த கிழக்கு மாநகர ஆளுநர் ஊடாக வழங்குவதற்குள்ளோம்.  

இந்த நாட்டின் ஜனாதிபதி அவர்கள் மட்டக்களப்புக்கு விஜயம் செய்த போது அவர் கூறியவிடையம் சுகாதாரத்துறை அபிவிருத்தி மற்றும் வெளிநாட்டவர்களின் வருகை தொடர்பிலும் தெரிவித்திருந்தார். அது நல்ல விடயம் அதற்காக வேண்டி ஓந்தாச்சிமடம் கடற்கரையை அழகுபடுத்தி நவீனமயப்படுத்தி தருவதற்கு கிழக்கு மாகாண சபை எனக்கு 12 மில்லியன் ரூபாய்க்களை ஒதுக்கீடு செய்திருக்கின்றது. அதற்காக நான் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். 

கிழக்கு மாகாணத்திலேயே முதலாவது கடற்கரை பிரதேசமாக இந்த ஓந்தாச்சிமடம் கடற்கரையை மாற்றி அமைக்க வேண்டும் என நான் நினைக்கின்றேன். அதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் வேண்டி இருக்கின்றேன். 

நாட்டின் ஜனாதிபதி எடுக்கின்ற சட்ட திட்டங்கள் என்ற அடிப்படையிலும் முதன்முதலாக இலங்கையிலேயே கடந்த 5 ஆம்; மாதம் 12 ஆம் திகதி வெற்றிலை மென்று பொது இடங்களில் உமிழ்த நபருக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதன ஊடாக வழக்கு தாக்கல் செய்திருந்தோம் இது இலங்கையில் முதல் முதலாக செய்தது எமது பிரதேச சபைதான். 

எனவே சுகாதார நடைமுறையை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவது எமது பிரதேசசபைதான். ஆளும் கட்சி கொண்டு வருகின்ற பிரேரணைகளை எதிர்க்கட்சி எதிர்த்தாலும் இந்த நாட்டின் ஜனாதிபதி சரியான முறையில் தமிழர்களுக்கு நேர்த்தியான நடைமுறைகளை கொண்டு வரும்போது அதனை எதிர்க்கக் கூடாது என எமது தலைமைபீடம் தெரிவித்திருக்கின்றது. 

நாட்டின் தலைமை பீடத்திற்கு கீழே கடமையாற்றக்கூடிய முதிர்ச்சி அடைந்த சரியான கட்டமைப்புடன் கொண்டு செல்கின்றார்கள். உங்களால் எங்களுடைய தமிழ் மக்களுடைய தேவைகள் இவ்வாறு பூர்த்தி செய்யப்படுமோ எதிர்காலத்திலும் நாங்கள் உங்களோடு பயணிப்பதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். 

எமது மக்களுக்கு தேவையான அனைத்தையும் இந்த அரசாங்கம் பூர்த்தி செய்கின்றதோ அதற்காக ஊன்றுகோளாக நாம் இருப்போம். அனைத்து காலங்களிலும் அனைவரையும் எதிர்த்து எதிர்த்துக் கொண்டு அதாவது எனது கட்சியை விடுத்து நான் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கின்றேன் அனைத்து அரசாங்கங்களையும் எதிர்த்துக் கொண்டு வாழ முடியாது. மாறாக எமது மக்கள் பல போராட்டங்களை சந்தித்து பயணித்தார்கள், அவற்றை மதித்து அவற்றுக்கு உரிய தீர்வினை இந்த அரசாங்கம் பெற்றுதருமாக இருந்தால் உங்களுக்கு எதிர்காலத்தில் நாங்கள் ஒரு சக்தியாக இருக்கலாம். இல்லையேல் அதனை நீங்கள் எதிர்த்தால் நாங்களும் உங்களுக்கு எதிர்ப்பாக பாரிய சக்தியாக திகழ்வோம். எதுவாக இருந்தாலும் எனது பயணம் உங்களோடு சரியாக இருக்க வேண்டும் என இறைவன் வேண்டுகின்றேன். என அவர் இதன்போது தெரிவித்தார்.




 

SHARE

Author: verified_user

0 Comments: