டெங்கு இனங்காணப்பட்ட பாடசாலைகளில் விசேட
செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் என்.சரவணபவன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான உயர்மட்டக் கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் செவ்வாய்கிழமை(11.08.2026) மட்டக்களப்பு மாவட்ட பழைய செயலகத்தில் நடைபெற்றது இதன்போது கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் என்.சரவணபவன் இவ்வாறு தெரிவித்தார்.
டெங்கு நோய் அதிகளவில் பரவும் 14 மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டமும் அடையாளம் காணப்பட்டு, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான தொடர்பில் இந்த உயர்மட்டக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் நோய் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன் தேவையற்ற கழிவுகளை முறையாக அகற்றி, நீர் தேங்கக்கூடிய இடங்களை இல்லாதொழித்து, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அரசாங்க அதிபர் மக்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள் பொலிசார் என பலரும் கலந்து கொண்டனர்.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment