மட்டக்களப்பு புதிய பொது நூலகத்திற்கு
புத்தகங்கள் வழங்கி வைப்பு.
மட்டக்களப்பு புதிய பொது நூலகத்தின் அறிவு
வளங்களை மேம்படுத்தும் நோக்கில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி இளையதம்பி சிறிநாத் விடுத்த வேண்டுகோளுக்கு
இணங்க யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆதீனத்தினால் வழங்கப்பட்ட ஒரு தொகுதி
புத்தகங்கள் மட்டக்களப்பு மாநகர சபையிடம் திங்கட்கிழமை(27.07.2026) தினம் உத்தியோகபூர்வமாகக்
கையளிக்கப்பட்டன.
இப்புத்தகங்களை பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்திய கலாநிதி இளையதம்பி சிறிநாத் மற்றும் ஞானமுத்து சிறிநேசன் ஆகியோர் இணைந்து, மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைத்தனர்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை பிரதி முதல்வர் வைரமுத்து தினேஸ்குமார், மாநகர சபை உறுப்பினர்கள், பொது நூலகப் பிரதம நூலகர், உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இவ்வாறான புத்தக நன்கொடைகள் மட்டக்களப்பு புதிய பொது நூலகத்தின் நூல் வளத்தை விரிவுபடுத்துவதுடன், அப்பகுதியில் வாசிப்பு கலாசாரத்தை ஊக்குவிப்பதற்கும், மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவதற்கும் பெரிதும் துணைபுரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment