விவேகானந்தபுர கிராமத்திற்கு 39 வீடுகளுக்குமான
7.8 மில்லியன் நிதி வழங்கி வைப்பு.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கைவிடப்பட்ட மாதிரி கிராமமாகிய விவேகானந்தபுர கிராமத்திற்கு 39 வீடுகளுக்குமான 7.8 மில்லியன் அளவிலான பகுதியளவு நிதி காசோலைகளாக அக்கிராம மக்களுக்கு நேற்றயத்தினம் கையளிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கந்தசாமி பிரபுவின் முயற்சின் கீழ் விவேகானந்தபுரம் கிராம மக்களுக்கான இந்த நிதி கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் பிரதேச செயலக பிரதித் திட்டப் பணிப்பாளர், மட்டக்களப்பு மாவட்ட வீடமைப்பு அதிகாரி, மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச பிரஜாசத்தி தலைவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம பொது அமைப்புகள் கலந்து கொண்டனர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறியதன் பின்னர் மக்களின் தேவைகளை அறிந்து அவற்றுக்குரிய நிதி ஒதுக்கீடுகளை வழங்குகின்ற செயற்பாடுகளை நாங்கள் முன்நெடுத்துக் கொண்டு வருகின்றோம். எனவே மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு எமது அரசாங்கம் தயாராக இருக்கின்றது. இதிலே நாங்கள் எந்த வேறுபாடுகளையும் நாங்கள் காட்டப்போவதில்லை. அதற்குரிய அனைத்து முனைப்புக்களையும் மேற்கொள்வோம் என இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment