5 Apr 2026

பாலையடிவட்டை இராணுவ முகாம் விடுவிப்பு பாதுகாப்பு அமைச்சுக்கும் ஜனாதிபதிக்கும் நன்றி தெரிவிப்பு-நேரடியாக சென்று பார்வையிட்ட சாணக்கியன்.எம்.பி

SHARE

பாலையடிவட்டை இராணுவ முகாம் விடுவிப்பு பாதுகாப்பு அமைச்சுக்கும் ஜனாதிபதிக்கும் நன்றி தெரிவிப்பு-நேரடியாக சென்று பார்வையிட்ட சாணக்கியன்.எம்.பி.

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவூபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலையடிவட்டை கிராமத்தில் அமைந்துள்ள பொதுச் சந்தைக் கட்டடத் தொகுதியில் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக இலங்கை இராணுவம் கையகப்படுத்தி முகாமிட்டிருந்து வந்து. 

இந்த பொதுச்சந்தைக் கட்டடத் தொகுதியில் முகாமிட்டிருந்த இராணுவத்தினர் தற்போது அவ்விடத்திலிருந்து வெளியேறி அக்காணியை விடுவித்துள்ளனர். அவ்விடத்தை நேற்றய தினம் வியாழக்கிழமை மாலை(02.04.2026) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், அப்பகுதி கிராம மக்கள் என பலரும் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தனர்.

இந்நிலையில், இவ்விடையம் தொடர்ச்சியாக பாராளுமன்ற அமர்வு களிலும், பாதுகாப்பு அமைச்சின் விசேட கூட்டங்களிலும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பெரும் முயற்சியை மேற்கொண்டு வந்திருந்தார். இந்த காணி இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்டதற்கு, பாதுகாப்பு  அமைச்சுக்கும், ஜனாதிபதிக்கும் நன்றிகளை தெரிவிக்கின்றோம், தாமும் தமது பிரதேச சபையினை பொறுப்பேற்று இரண்டாவது சபை அமர்வின்  பிரேரணைகளை ஜனாதிபதிக்கும்  பாதுகாப்பு அமைச்சுக்கும் அனுப்பியிரந்தோம், என இதன்போது போரதீவுபற்று பிரதேச சபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தெரிவித்தார். 

இதன்போது இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், போரதீவுபற்று பிரதேசசபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், அப்பகுதி கிராம மக்கள் எனப்பலரும் பிரன்னமாகியிருந்தமை இன்போது பிரசன்னமாகியிருந்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: