5 Apr 2026

தொகுதியில் தற்காலிக கொட்டகைகளில் வைத்து வியாபாரம் செய்தவர்களுக்கு நிரந்தர கடைத் தொகுதி வழங்கி வைப்பு.

SHARE

சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பொதுச்சந்தை தொகுதியில் தற்காலிக கொட்டகைகளில் வைத்து வியாபாரம் செய்தவர்களுக்கு   நிரந்தர கடைத் தொகுதி வழங்கி வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைத் தொகுதியில் இதுவரை காலமும் தற்காலிக கொட்டகைகளில் வைத்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த வியாபாரிகளுக்கு நேற்றயத்தினம் வியாழக்கிழமை(02.04.2026) அர்களுக்குரிய நிரந்தரக் கடடைத் தொகுதிகள் வழங்கி வைக்கப்பட்டன. 

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் இதன்போது கலந்து கொண்டு கடைத் தொகுதிகளை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். 

இதுவரைகாலமும் தற்காலிக கொட்டகைகளில் வைத்து வியாபாரம் செய்து வந்த தமக்கு நிரந்தர கடைத் தொகுதி வழங்கி வைத்தமைக்கு வியாபாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.








 

SHARE

Author: verified_user

0 Comments: