செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில்
12 உயரமுடைய அடி சரஸ்வதி சிலை திறந்து வைப்பு.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கீழுள்ள செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் 2017 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்ததர சாதாரண தரத்தில் கற்ற மாணவர்களின் அனுசரணையில் அமைக்கப்பட்ட 12 அடி உயரம் கொண்ட சரஸ்வதி சிலை இன்று திங்கட்கிழமை(20.04.2026) உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வித்தியாலய பிரதி அதிபர் திருமதி சு.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது மேலும் காரைதீவு பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர் பிரணவரூபன், மற்றும் முன்னாள் அதிபர் அருள்ராசா, பெற்றோர், ஆசிரியர்கள், மாவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட 12 அடி உயரமுடைய சரஸ்வதி சிலைக்கு பூர்வாங்க கிரியைகள் நடைபெற்று அதிதிகளால் திரை நீக்கம் செய்து வைத்து திறந்து வைக்கப்பட்டது.











0 Comments:
Post a Comment