வெற்றிலை மென்றுகொண்டு வெதுப்பக வியாபாரத்தில்
ஈடுபட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு (08.03.2026) வெற்றிலை மென்று கொண்டு வெதுப்பக வண்டியில் வெதுப்பக உணவுப் பொருட்களை விற்பனைக்குக் கொண்டு சென்ற நபர் ஒருவருக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையில் குறித்த வண்டியின் சாரதி மருத்துவ சான்றிதழையும் பெற்றிருக்கவில்லை எனவும் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவிக்கின்றார்.
இந்நிலையில் வெதுப்பக வண்டிகளில் சினிமா பாடல்களை பெரும் சத்தமாக ஒலி எழுப்பிச் செல்வதனால் அதிக சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதனால், வெதுப்பக வண்டிகளுக்கென பிரத்தியேகமானதொரு ஒலியை ஏற்கனவே வழங்கியிருந்த போதிலும் அதனை அவர் கடைப்பிடிக்காததனாலும், பொதுச் சுகாதார பரிசோதகர் ஊடாக அதற்காகவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு எவராவது செயற்படுவார்களாயின் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து வெதுப்பக உரிமையாளர்களுடனும், விசேட கலந்துரையாடல் கூட்டம் கடந்த மாதம் பிரதேச சபையில் இடம்பெற்று இருந்த நிலையில், அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக பொதுச் சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைக்கமைய சுகாதார விதி முறைகளுக்கு அமையவே வெதுப்பக உணவுப் பொருட்களை வியாபாரம் செய்ய வேண்டும் என அப்பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜினால் ஏற்கனவே சகல வெதுக்கப உணவு விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment