செங்கலடி ஐயங்கேணி பரலோக தரிசன எழுப்புதல் அறுவடை சபை திறப்பு விழா
நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேசத்திற்குட்பட்ட ஐயங்கேணி பாரதி கிராமத்தில் புதிய பரலோக தரிசன எழுப்புதல் அறுவடைச் சபை திறப்பு விழா நிகழ்வு செவ்வாய்க்கிழமை(03.03.2026) நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத், சுயாதீன போதகர்கள் ஐக்கியத்தின் தலைவர், மட்டக்களப்பு மாவட்ட போதகர்கள் ஐக்கியத்தின் தலைவர், மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட போதகர்கள், திருச்சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.
தற்போதைய காலகட்டத்தில் தமிழ் மக்களிடையே
பலமான ஒற்றுமை அவசியமாகக் காணப்படவேணடும், சமூகத்தில் நிலவ வேண்டிய அமைதி மற்றும் நல்லிணக்கம்
என்பவற்றோடு தமிழ் சமூகம் ஒருமித்த கருத்துடன் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும்என மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது தெரிவித்தார்.

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment