23 Feb 2026

விமானப்படையினரால் மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட கல்லூரியில்; புதிய கணணிக் கூடம் திறந்து வைத்து.

SHARE

விமானப்படையினரால் மட்டக்களப்பு கோட்டமுனை  கனிஷ்ட  கல்லூரியில்; புதிய கணணிக் கூடம் திறந்து வைத்து.

இலங்கை விமானப்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு கோட்டமுனை  கனிஷ்ட கல்லூரியில் 20 இலட்சம் ரூபாய் செலவில் புதிய கணணி கூடம்  திறந்து வைத்து மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை(23.02.2026) நடைபெற்றது. 

பாதுகாப்பு அமைச்சினால் கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் கனிஷ்ட பாடசாலை மாணவர்களின் கணணி அறிவை மேம்படுத்து முகமாக மாணவர்களுக்கு கணிணிகள் மற்றும் உபகரணங்களை கொண்ட புதிய கணணிக்கூடம் இதன்போது கையளிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் இலங்கை விமானப்படையின் மின்னணுவியல் மற்றும் கணிணி பொறியியல் பணிப்பாளர் நாயகம் ஏ.வி.எம்.ஹெட்டியாராச்சி  பிரதம அதிதியாக கலந்து கொண்டு புதிய கணணி கூடத்தை திறந்து வைத்து மாணவர்களின் பாவனைக்காக கையளித்தார். 

மட்டக்களப்பு விமானப்படை முகாம் கட்டளை அதிகாரி குரூப் கெப்டன் ரன் ரஜீவன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு வலையக்கல்வி உயர் அதிகாரிகள், பாடசாலையில் அதிபர் ஆசிரியர்கள்  என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.











 

SHARE

Author: verified_user

0 Comments: