27 Feb 2026

மட்டக்களப்பில் மாற்று திறனாளிகளுக்கான சேவைகளை வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல்.

SHARE

மட்டக்களப்பில் மாற்று திறனாளிகளுக்கான சேவைகளை வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கான சேவைகளை வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்தலைமையில் மட்டக்களப்பு நகர மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை(27.02.2026) இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்றக் குழுத்தலைவர் சுகத் வசந்த டி சில்வா, மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்றக் குழு இணைத்தலைவர் பத்மநாதன் சத்தியமூர்த்தி, மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் கந்தசாமி பிரபு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன், இராசமாணிக்கம் சாணக்கியன், இளையதம்பி சிறிநாத், ஆகியோரின் பங்கு பற்றுதலுடன்  இடம்பெற்றது. 

இலங்கைப் பாராளுமன்றத்தின் மாற்றுத் திறனாளிகளுக்கான பாராளுமன்றக் குழுத்தலைவரினால் மேற்கொள்ளப்பட்ட செயற்திட்டத்திற்கு அமைவாக நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், தேவைகளை ஆதரித்தல் மற்றும் விரிவான சட்டமன்றக் கொள்கை சீர்திருத்தங்களை மேற்கொள்ளல் முதலானவற்றை மையமாகக் கொண்ட  மாவட்ட மட்ட குழு இதன்போது அமைக்கப்பட்டது. 

மாற்று திறனாளிகளுக்கான தேவைகளை நிறைவேற்றுவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள திட்டங்களை  நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதன் ஓர் அங்கமாக நாடளாவிய ரீதியில் மூன்றாவது மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கான கலந்துரையாடல் இதன்போது இடம்பெற்றது. 

மாவட்டத்தில்  மாற்றுத்திறனாளிகளிகள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகளை நேரடியாக கலந்துரையாடி அதுதொடர்பான விடயங்களைப் பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட அரச உத்தியோகத்தர்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் மாவட்ட ரீதியாக கலந்துரையாடல் அமைந்திருந்தது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 9000 மேற்பட்ட மாற்று திறனாளிகள் காணப்படுவதுடன் 14 மாற்றுதிறனாளி சங்கங்கள் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

இதன்போது கருத்து தெரிவித்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாராளுமன்றக் குழுத்தலைவர் மாற்றுதிறனாளிகளுக்கு மனித நேய அடிப்படையில் நாம் சேவையை வழங்க வேண்டும் மேலும் ஒரு மனித நேய சமூகத்தை நாம் உருவாக்க வேண்டும் என்பதுடன் மாற்று திறனாளிகள் பரீட்சைகளின் போது எதிர்நோக்கும் பிரச்சினை தீர்ப்பதற்கு கல்வி அமைச்சிடம் கலந்துரையாடப்பட்டதாக இதன்போது தெரிவித்தார். 

இந்நிகழ்வில் மேலும் உதவி மாவட்ட  செயலாளர் ஜீ.பிரணவன், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி சந்திரகலா கோணேஸ்வரன், அரச உயர் அதிகரிகள், திணைக்கள தலைவர்கள், துறைசார் நிபுணர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள், சமூகசேவை உத்தியோகத்தர் மற்றும் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.












SHARE

Author: verified_user

0 Comments: