நீர் தேங்கி துர்நாற்றம் வீசும் களுவாஞ்சிகுடி
பேரூந்து தரிப்பு நிலையம் - கவனிப்பாரற்ற நிலையில் அதிகாரிகள்.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட களுவாஞ்சிக்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான போரூந்து தரிப்பு நிலையம் குன்றும் குழியுமாக மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசும் வீசிவருவதனால் பிரயாணிகளும், அப்பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் வியாபாரிகளும், மிகுந்த அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றனர்;
இந்த பிரதான போரூந்து தரிப்பு நிலையத்திற்கு அருகாமையில், பொலிஸ்நிலையம், வலயக்கல்வி அலுவலகம், கோட்டக்கல்வி அலுவலகம், நீதிமன்றம், பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம், தேசிய பாடசாலை, மற்றும் பல்வேறு கடைத்தொகுதிகளும் காணப காணப்படுகின்ற நிலையில், சுகாதார சீர்கேடாக காணப்படுகின்ற இந்த பேரூந்து தரிப்பு நிலையத்தை சம்மந்தப்பட்டவர்கள் இதுவரையில் கருத்திற்கொள்ளாமலிருப்பது மிகுந்த கவலையளிப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
எனவே துர்நாற்றம் வீசும் இந்த பேரூந்து
தரிப்பு நிலையத்தை சீர் செய்து சுற்றாடலைப பாதுகாப்பதோடு, பிரயாணிகளின் ஆரோக்கியத்திற்குமாக
சம்மந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க முன் வரவேண்டும் என அக்ககுதி பொதுமக்கள்
கோரிக்கை விடுக்கின்றனர்.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment