9 Feb 2026

கதிரவன் இன்பராசாவின் மண்ணில் புதையும் மத்தளம் நூல் வெளியீட்டு விழா.

SHARE

கதிரவன் இன்பராசாவின் மண்ணில் புதையும் மத்தளம்  நூல் வெளியீட்டு விழா.

மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்பு கதிரவன் கலைக்கழகத்தின் தலைவர் கதிரவன் த.இன்பராசா எழுதிய “மண்ணில் புதையும் மத்தளம் எனும் சிறுகதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை(08.02.2026) மாலை புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், முன்னாள் கிழக்கு மாகாண சபையின்  பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி மூ.கோபாலரெத்தினம், செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன், மட்டக்களப்பு தமிழ் சங்க நிர்வாகிகள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நூல் வெளியீட்டு விழால் முதற் பிரதியை பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்களிடமிருந்து மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் உறுப்பினர் கலைஞர் இரா.புவிராஜசிங்கம் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து நூலாசிரியல் அதிகதிகளுக்கு நூலை வழங்கி வைத்தார். நூல் நயவுரையை மட்டக்களப்பு கல்வி வலய உதவி கல்வி பணிப்பாளர் அ.ஜெகநாதன் நிகழ்த்தினார்.































SHARE

Author: verified_user

0 Comments: