டித்வா புயலினால் பாதிக்கப்பட்டிருந்த
மட்டக்களப்பு கொழும்பு கடுகதி புகையிரத நேரடி சேவையானது மீண்டும் ஆரம்பம்.
கடந்த 45 நாட்களுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புலத்தேசி கடுகதி புகையிரத சேவை மட்டக்களப்பில் இருந்து நேரடியாக கொழும்பு ஞாயிற்றுக்கிமை(11.01.2026) நண்பகல் சேவையை ஆரம்பித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்
கந்தசாமி பிரபு போக்குவரத்து அமைச்சர்க்கு விடுத்த வேண்டுகோளின் பெயரில் இந்த புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வாரஇறுதியில் பொதுமக்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவையானது கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கான கடுகதி சேவையை முன்னெடுத்திருந்தது.
மட்டக்களப்பில் இருந்து நண்பகல் 11.50 இற்கு ஆரம்பமான கொழும்புக்கான இக்கடுகதி சேவை இரவு 8 மணி இது கொழும்பை சென்றடையும்.
எதிர்காலத்தில் பொதுமக்கள் மாணவர்களின்
நலன் கருதி இந்த சேவையானது மேலும் விஸ்தரிக்கப்பட உள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment