அனர்தங்களுக்கு முகம் கொடுத்தல் தொடர்பாக இளைஞர் யுவதிகளுக்கு தலைமைத்துவ பயிற்சி முகாம்.
இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த இளைஞர், யுவதிகளுக்கான அனர்தங்களுக்கு முகம் கொடுத்தல் தொடர்பான தலைமைத்துவ பயிற்சி முகாம் புதன்கிழமை(24.12.2025) பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதரின் ஆலோசனை மற்றும் தலைமையின் கீழ், உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகௌரி தரணிதரன் அவர்களின் நெறிப்படுத்தலில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த பயிற்சி முகாமுக்கு வளவாளராக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் முன்னாள் தலைவரும், அனர்த்த முன்னாயத்தம் தொடர்பான சிரேஸ்ட பயிற்றுவிப்பாளருமான த.வசந்தராசா கலந்து கொண்டு இளம் சமுதாயத்தினர் தங்கள் கிராம சேவகர் பிரிவுகளில் அனர்தங்களுக்கு முகம்கொடுத்தல், அனர்தங்களில் இருந்து பாதுகாத்து கொள்ளல் மற்றும் முன்னாயத்தமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்ற பல விடயங்கள் தொடர்பில் பயிற்சிகளையும் விளக்கங்களையும் வழங்கினார்.
இளைஞர் சேவை உத்தியோகத்தர் த.சபியதாஸின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழகங்களிலிருந்து 75 இற்கு மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டிருந்ததுடன், அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு நன்மையடைந்தனர்.
இந்த பயிற்சி முகாமில் மேலும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாகாண பணிப்பாளர் எச்.யு.சுசந்த, மாகாண பிரதி பணிப்பாளர் ஆலுதீன் ஹமீர், உதவி பணிப்பாளர் திருமதி நிஷாந்தி அருள்மொழி, பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் திருமதி சதீஸ்வரி கிருபாகரன் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இறுதியில் பயிற்சி முகாமில் கலந்து கொண்டிருந்த இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழ்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment