மட்டக்களப்பில் தொடர்ந்தும் பலத்த மழை
வெள்ளம் பெரியகல்லாறு முகத்துவாரம் (ஆற்றுவாய்) வெட்டப்பட்டுள்ளது.
தற்போது பெய்துவரும் வடகீழ் பருவப் பெயற்சி மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழ் நிலங்களில் பலத்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட செயற்பாடுகளில் சற்று தளம்பல் ஏற்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
வெள்ளநீர் வழிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதனால் பல கிராமங்களின் உள் வீதிகளும் வெள்ள நீரால் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் பெரியகல்லாறு ஆற்றுவாய் வெட்டப்பட்டு வெள்ள நீரை வெளியேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்கோள் விடுத்திருந்தனர்.
ஆதற்கிணங்க மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் உருத்திரன் உதயசிறீதர் தலைமையில் புதன்கிழமை(26.11.2025) நடைபெற்ற அனர்த்த முன்னாயத்த கூட்டத்தில் பெரியகல்லாறு முகத்துவாரம் வெட்டுவதது தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
அதற்கிணங்க மண்முனை தென்எருவில் பற்று பிரதேச சபையின்; இரண்டு ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் புதன்கிழமை மாலை பெரியகல்லாறு முகத்துவாரம் ஆற்றுவாய் வெட்டப்பட்டு வெள்ள நீர் கடலை நோக்கி வழிந்தோடுவாற்கு விடப்பட்டுள்ளது.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அதிகரித்த வெள்ளப்பெருக்கினால், மக்கள்
குடியிருப்புக்களில் தேங்கியிருந்த வெள்ளநீர் வேகமாக கடலை நோக்கிச் செல்வதை அவதானிக்க
முடிகின்றது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 Comments:
Post a Comment