மட்டக்களப்பில் தொடர்ந்து பலத்த மழை ஆகக்கூடி தழை வீழ்ச்சி உறுகாமத்தில் 300 மில்லி மீற்றர் பதிவு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த பலத்த மழை பெய்து வருகின்றது இந்நிலையில மாவட்டத்hதில் அமைந்துள்ள வெல்லாவெளி, பழுகாமம், போரதீவு, களுவாஞ்சிகுடி, பட்டிப்பளை, உள்ளிட் பல பகுதிகளிலும் அமைந்துள்ள சிறிய கிராமியக் குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிவதை அவதானிக்க முடிவதோடு பார்க்கும் இடங்கள் அனைத்தும் வெள்ளக்காடாய் காட்சி தருகின்றது.
இந்நிலையில் மாவட்டத்தின் பிரதான குளங்களின் நீர்மட்டங்கள் வெகுவாக உயர்ந்துள்ளதுடன், வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ள.
அந்த வகையில் வியாழக்கிழமை முற்பகல் 10 மணிவரையில் நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 27.5 அடி, தும்பங்கேணிக்குளத்தின் நீர்மட்டம் 12 அடி, உன்னிச்சைக்குளம் 27.4 அடி, உறுகாமம் குளம் 18.6 அடி, அக்குளத்தில் 2 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. வாகனேரிக்குளம் 16.3 அடி, கட்டுமுறிவு 12 அடி, கித்துள்வெவ 5.7 அடி, வெலிக்காக்கண்டிய 16.6 அடி, வடகுனைக்குளம் 9 அடி, புiணாணை அணைக்கட்டு 8.9 அடி மாவடிஓடை அணைக்கட்டு 14 அடி நீர்மட்டமாக உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் வியாழக்கிழைமை காலை 8.30 மணியுடன் கடந்த 24 மணித்தியாலத்தில் நவகிரிப்ப பகுதியில் 127 மில்லி மீற்றர், தும்பங்கேணிப் பகுதியில் 67 மில்லி மீற்றர், உன்னிச்சைப் பகுதியில் 160.3 மில்லி மீற்றர், உறுகாமம் பகுதியில் 300 மில்லி மீற்றர், வாகனேரி பகுதியில் 139.5 மில்லி மீற்றர், கட்டுமுறிவு பகுதியில் 96 மில்லி மீற்றர், மட்டக்களப்பு நகரில் 169.3 கல்முனை பகுதியில் 66.1 மில்லி மீற்றர், மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வாநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது
இது இவ்வாறு இருக்க மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைக்கும் எழுவாங்கரைக்குமான போக்குவரத்து மார்க்கங்களில் வெள்ள நீர் மூழ்கியுள்ளதனால் அவ்வீதிகளுடனா தரைவழிப் போக்குவரத்துக்கள் முற்றாகத் தடைப்பட்டுள்ளன.
அந்த வகையில் பட்டிருப்பு பாலத்தின் உடனான பிரதான வீதி, மண்முனை பாலத்தின் உடனான பிரதான வீதி, வவுணதீவு பாலத்தின் உடனான போக்குவரத்து வீதி, கிரான் புலிபாஞ்சகல் மதகு உடன போக்குவரத்துக்கள் முற்றதக தடைப்பட்டுள்ன.
மண்டூர் - குருமண்வெளி, மற்றும் அம்பிளாந்துறை – குருக்கள்மடம் ஆகிய இரு நீர்வழிப் படகுச் சேவைகளும், பலத்த காற்று வீசுவதனால் மிகவுமு; அவசர தேவைகனுக்காத மதத்திரம் இடம்பெற்று வருகின்றன
இதனிடயே பழுகாமம் - பெரியபோரதீவு, வெல்லாவெளி மண்டூர், கல்முனை சவளக்களை, வெல்லாவெளி – திவுலாணை, ஆகிய வீதிப் போக்குவரத்துக்களும் முற்றாகத் தடைப்பட்டுள்ளன.
இதனிடையே போரதீவுப் பற்றுப் பிரதேச சபை உழவு இயந்திரங்கள் மூலம் பட்டிருப்பு பெரியபோரதீவு பிரதான வீதியில் மக்களை ஏற்றி இறக்கும் செயற்பாடகளில் ஈடுபட்டு வருகின்றது.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாழக்கிழமை வரையில் பிரதேச செயலாளர் பிவுகளில 257 குடும்பங்களைச் சேர்ந்த 850 பேர் இடம்பெயர்ந்துள்ளார்கள். அவர்களில் 3 இடைத்தங்கல் முகாம்களில் 235 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் 167 வீடுகள் பகுதியளில் சேதடைந்துள்ளதாகவும், மட்டக்களப்பு மவாட்ட அனர்த்த முனாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.





0 Comments:
Post a Comment