செட்டிபாளையம் ம.வி மாணவனுக்கு அவுஸ்ரேலியா உயர்ஸ்தானியரால் கௌரவம்.
சமூகப் பொறுப்புடன் ஆவுஸ்ரேலியா அரசாங்கமும் இலங்கை கல்வி உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சும் இணைந்து செயற்படுத்திய சட்டவிரோதமாக ஆவுஸ்ரேலியாவிற்கு கடல் மார்க்கமாக செல்வதற்கு முயற்சிப்பதை தடுக்கும் நோக்குடன் தேசிய ரீதியில் ஒழுங்கு செய்யப்பட்ட ஓவியப் போட்டியில் செட்டிபாளையம் மகா வித்தியாலய மாணவன் செல்வன் புவிதரன் சஞ்ஜய்வன் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடம் பெற்றுள்ளார்.
இதனை கௌரவித்து இலங்கைக்கான ஆவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் ர்.நு. ஆயவவாநற னுரஉமறழசவா அவர்களால் பாராட்டுச் சான்றிதழும் மூன்றாம் நிலை தொழில்கல்வி ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்ட எந்த ஒரு நிறுவனத்திலும் கல்வி கற்க கூடிய 20000 ரூபா புலமைப் பரிசில் விருதினையும் மற்றும் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட ஆக்கங்களுடன் கூடிய இதழினையும் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் வைத்து சனிக்கிழமை(15.11.2025) வழங்கி கௌவரவிக்கப்பட்டார்.

0 Comments:
Post a Comment