கிரான்குளத்தில் காட்டு யானைகள் துரத்தும்
பணி இரவிலும் முன்னெடுப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான் நிரப்பரப்பிற்குள் கடந்த இரண்டு மாதகாலமாக மட்டக்களப்பு வாவியோரமுள்ள சதுப்பு நிலப்பரப்பிற்குள் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அகவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை(04.11.2025) இரவு மட்டக்களப்பு கிரான்குளம் கிராமத்தில் காட்டு யானைகள் சஞ்சரிப்பதை அவதானிக்க முடிந்தது.
இதன் போது சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் மண்முனை பற்று பிரதேச சபை தவிசாளர் செந்தில்குமார் ஆகியோர் சென்று வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியதையடுத்து காட்டு யானைகளை துரத்தும் பணியை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த காட்டு யானைகளை துரத்தும் பணியில்,
மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்களத்தினரும், இராணுவத்தினரும் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
0 Comments:
Post a Comment