30 Oct 2025

சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி கோவில் சூரன்போர் நடைபெற்ற சூரன்போர்

SHARE

கிழக்கிழங்கையில் வரலாற்று சிறப்பு பெற்ற சிகண்டி முனிவரினால் பூசிக்கப்பட்ட வேலுடை சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி கோவில் ஸ்கந்த ஷஷ்டி விரத்தம் சென்ற புதன்கிழமை (22) ஆரம்பித்து தொடர்ந்து ஆலயத்தில் ஸ்கந்த ஷஷ்டி விரதகால உற்சவ குருக்கள் சிவஸ்ரீ விஜய ராகவ மோகனா குருக்கள் தலைமையில் உற்சவங்கள் நடைபெற்று சுவாமி உள்வீதி வலம் வந்து கந்தபுராணம் பாடப்பட்டு உற்சவங்கள் நடைபெற்றது..

ஸ்கந்த ஷஷ்டி விரத்தின் 6ம் நாள் ஆறுமுகப் பெருமானுக்கு சண்முகா அர்ச்சனை விசேட பூசை உற்சவம் இடம்பெற்றது. ஆலயத்தின் சூரன்போர் உற்சவமானது பிற்பகல் ஆரம்பித்தது, முதலில் சூரபத்மனுக்கு தீபாராதனை இடம்பெற்றும் ஆலயத்தின் வெளிவீதி வருகைதந்த சூரபத்மன் போர்களத்தில் ஈடுபட்டார்.

அதன்பின்னர் போர்க்கோலம் கொண்ட ஆறு முகப்பெருமான் வெளிவீதிக்கு வருகைதந்ததும் முருகனின் போர் வேகம் அதிகாரிக்க சூரபத்மன் முருகப் பெருமானிடம் போரிட சூரபத்மனின் தலைகள் ஆயுதங்கள் மடிய இறுதியில் முருகப்பெருமானின் வேலால் சூரபத்மனை வதம்செய்ய சூரசங்காரம் முடிவடைந்தது, அதன் பின்னர் போர் முடிவடைந்தவுடன் விரதகாரர்கள் தலையில் தண்ணீர் தெளித்து தேங்காய் உடைத்து முருகனை வழிபட்டனர்.

அதன் பின்னர் முருகப்பெருமானுக்கு பட்டு சாத்தப்பட்டு பூசைகள் நடைபெற்றது.  சூரன்போர் உற்சவத்தைக்கான பல்லாயிரக்காணக்கான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸ்கந்த ஷஷ்டி விரதகால ஏற்பாடுகள் அனைத்தும் ஆலயத்தின் வன்னிமை சி.பாலச்சந்திரன் மற்றும் வண்ணக்குமார் தலைமையில் நடைபெற்றது. அத்துடன் சித்தாண்டி முருகன் கோவில் சூரன்போரில் சூரபத்மனை தூக்கி போர்கள ஆட்டத்தில் இம்முறையும் சித்தாண்டி மணல்துறை பிள்ளையார் ஆலய நிருவாக உறுபினர்கள் கலந்துகொண்டு சிறப்பான முறையில் வழிநடாத்தியிந்தனர்.








SHARE

Author: verified_user

0 Comments: