14 Oct 2025

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் ஐந்தாவது சபை அமர்வு.

SHARE

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் ஐந்தாவது சபை அமர்வு.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று  பிரதேச பையின் ஐந்தாவது சபை அமர்வு செவ்வாய்கிழமை(14.10.2025) களுதாவளையில் அமைந்துள்ள பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் பிரசன்னமாகி அவர்களது கருத்துக்களை முன்வைத்திருந்தனர். 

இப்பிரதேச சபையில் தவிசாளராக நான் பொறுப்போற்று 4 தாதங்களில் இப்தேசத்திற்கு 140 மில்லியன் செலவில் அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டுள்ளன. என இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசானர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்தார். 

முறையாக திண்மக்கழிவகற்றலை மேற்கொள்தல், திண்மக் கழிவுகளை தரம் பிரித்து வைக்குமாறு மக்களைத் தெழிவூட்டுதல், வீதி மின் விளக்குகளைப்பொருத்ததல், விளையாட்டு மைதானங்களையும், மயானங்களையும், புனரமைப்பு செய்தல், வீதிகளைப் புனரமைப்புச் செய்தல், உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டன.


 










SHARE

Author: verified_user

0 Comments: