மட்டக்களப்பு குருமண்வெளி பொது நூலகத்தில்
இடம்பெற்ற சித்திரக்கண்காட்சி.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட குருமன்வெளி பொது நூலகத்தில் வாசிப்பு மாதத்தை முன்னிட்டு சித்திரக் கண்காட்சி செவ்வாய்கிழமை(14.10.2025) இடம்பெற்றது.
இதன் அங்குராப்பன நிகழ்வில்; மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், மற்றும் பிரதேச சபை உறுப்பினர் பத்மதேபு, நூலகர், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது வருகை அதிதிகள் உள்ளிட்ட அனைவரும், சித்திதக் கண்காட்சியை பார்வையிட்டனர்.
0 Comments:
Post a Comment