24 Oct 2025

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு புதிய வீடுகளை அமைப்பதற்கான காசோலைகள் வழங்கி வைப்பு.

SHARE

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு  புதிய வீடுகளை அமைப்பதற்கான காசோலைகள் வழங்கி வைப்பு.

அரசாங்கத்தினால் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தில்  விடற்ற மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான உதவி திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இதன் ஒரு கட்டமாக வெள்ளிக்கழமை(24.10.2025) மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு கடந்த கால அரசாங்கத்தினால் இடை நடுவில் கைவிடப்பட்ட சேதமடைந்த வீடுகளை திருத்தி புனரமைப்பதற்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் உள்ள கிழக்கு மாகாண கட்டிடங்கள் திணைக்கள பிரதம  ஏந்திரி அலுவலகத்தில்  கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் ஜி.எல்.ஜோன்சன் தலைமையில் இடம்பெற்றது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 216  சேதம்மடைந்த வீடுகள் இன்னமும் புணரமைக்கப்பட வேண்டி உள்ளது அதன் ஒரு கட்டமாகவே இன்று தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இந்த பண உதவி வழங்கி வைக்கப்பட்டது. 

இதன்போது கட்டிட்டங்கள் திணைக்கள பிரதம பொறியியலாளர் எஸ்.வினோராஜ், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவி பிரதிநிதியாக மட்டக்களப்பு மாநகர சபை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள், மற்றும் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள், கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட உயர் அதிகாரிகள், பயனாளிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.












 

SHARE

Author: verified_user

0 Comments: