அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின்
115 வது ஆண்டு நிறைவு விழா நடைபவனி.
மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குபட்பட்ட அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் 115 வது ஆண்டு நிறைவு விழா நடைபவனி இன்றைய சனிக்கிழமை(11.10.2025) நடைபெற்றது.
இதன்போது அரசடித்தீவு விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தின் வீதி நுழைவாயில் பெயர் பலகை திரை நீக்கம் செய்யப்பட்ட பின்னர் நடைபவனி ஆரம்பமானது.
அதனை தொடர்ந்து அரசடிதீவுலிருந்து ஆரம்பமாகிய நடைபவனி, கொக்கட்டிச்சோலை பிரதான வீதி ஊடாக மகிழடித்தீவு, பண்டாரியாவெளி, கடுக்காமுனை ஊடாக பிரதான வீதிகளூடாக மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.
இதன் போது அப்பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பழையமாணவர்கள், முன்னாள் அதிபர்கள், முன்னாள் ஆசிரியர்கள், கிராம பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்குபற்றியிருந்தனர்.
0 Comments:
Post a Comment