ஊடகவியலாளர்களுக்கு சட்ட நடைமுறைகள் மற்றும்
பால் நிலை சமத்துவம் தொடர்பான பயிற்சி.
தற்கால சட்டநடைமுறைகள் தொடர்பிலும், பால்நிலை சமத்துவம், மாண்புறு மாதவிடாய், போன்ற பல விடையங்கள் தொடர்பிலான பயிற்சிநெறி மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள இந்து இளைஞர் மன்றக் கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை(28.09.2025) நடைபெற்றது.
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நாத்திய இப்பயிற்சி நெறியில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலார்கள், ஊடகப் பயிற்சி மாணவர்கள் என 30 பேர் கலந்து கொண்டிருந்தனர்.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் நிகழ்ச்சித்திட்ட
அதிகாரி இந்துமதி ஹரிகரதாமோதனின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இப்பயிற்சி நெறியில் ஊடகச்
சட்டங்ஙகள் மற்றும் தற்கால ஒழுங்கு நடைமுறைகள் தொடர்பில் சட்டத்தரணி ஏ.ஐங்கரன் அவர்களும்,
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தின் திருகோணமலை மாவட்ட உத்தியோகஸ்த்தர் இதயராணி சித்திரவேல்
பால்நிலை சமத்துவம், மாண்புறு மாதவிடாய் போன்ற விளக்கங்களை வளங்கினார்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
0 Comments:
Post a Comment