வளமான நாடும் அழகான வாழ்க்கையும் எனும்
தொனிப்பொருளில் போரதீவுப் பற்றுப் பிரதேச சபையினால் நடாத்தப்பட்ட நடமாடும் சேவை.
வளமான நாடும் அழகான வாழ்க்கையும் எனும் தொனிப்பொருளில் நாடுதழுவிய ரீதியில் உள்ளுராட்சி வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களும் தங்களது வேலைகளை மக்கள் மயப்படுத்தி வருவதை அவதானிக்க முடிகின்றது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுபற்று பிரதேச சபைனால் ஏற்பாடு செய்யப்பட்ட அரச சேவைகளை மக்களின் காலடிக்குக் கொண்டு செல்லும் நடமாடும் சேவை திங்கட்கிழமை(15.09.2025) திருப்பழுகாமத்தில் நடைபெற்றது.
போரதீவுப் பற்றுப் பிரதேச சபைத் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையின்போது திருப்பழுகாமம் வட்டார பொதுமக்கள் கட்டட விண்ணப்பம், திண்மக்கழிவகற்றுதல், தெரு விளக்குப் பொருத்துதல், வீதி அபிவிருத்தி, உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பில் அவ்விடத்திலேயே சேவைகளைப் பெற்றுக் கொண்டனர்.
எனினும் தமது கிராமத்தில் காணப்படும்
பல குறை நிறைகள் தொடர்பிலும் இதன்போது கலந்து கொண்டிருந்த அதிகாரிகள் மத்தியில் அந்த
வட்டார மக்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நடமாடும் சேவையில் போரதீவுப் பற்றுப்பிரதேச சபையின் செயலாளர் பகிரதன், மற்றும் உபதவிசாளர், ஏனைய பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment