புலமை பரிசில் வழங்கும் நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட
50 மாணவர்களுக்கு பெரண்டினா நிறுவனத்தினால் புலமை பரிசில் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(18.09.2025)
ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
இரண்டு வருடங்களுக்கு இப்புலமை பரிசில் உதவுத் தொகை குறித்த மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக குறித்த நிறுவனத்தினர் தெரிவித்தனர். இதன் முதற்கட்டமாக ஒவ்வொரு மாணவருக்கும் 4500 ரூபாய் வீதம் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனைப்பற்று
உதவிப்பிரதேச செயலாளர் பார்த்தீபன், பெரண்டினா
நிறுவனத்தின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பிரதிலீபன் மற்றும் ஏனைய கிளைமுகாமையாளர்களும்
தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும், கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment