22 Sept 2025

கற்றலில் விசேட திறமை காட்டிய பின்தங்கிய பிரதேச மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு .

SHARE

கற்றலில் விசேட திறமை காட்டிய பின்தங்கிய பிரதேச  மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு.

இவ்வருடம் வெளியாகிய ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. 

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மாவட்ட வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்ற 70 மாணவர்களை  கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(19.09.2025) பட்டிப்பளையில் அமைந்துள்ள அறிவாலயம்  காரியாலயத்தில் இடம்பெற்றது. 

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் இருந்து 2024 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றி மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற 69 மாணவர்களும், 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தைச் சேர்ந்த நாவற்காடு கனிஸ்ட வித்தியாலய மாணவி  பிறைசூடி  அபிரிஜா என்ற மாணவியுமாக 70 மாணவர்கள் இதன் போது கௌரவிக் கப்பட்டனர். 

ஒரு மாணவருக்கு 5000 ரூபாய் வீதம் வங்கிக் கணக்கில் வைப்பில் இட்டு வங்கிப்புத்தகம் மற்றும் மாமரக் கன்றுகளும் வழங்கப்பட்டன. 

குறித்த செயற்பாட்டை முன்னெடுத்து வரும் தொழிலதிபர் நல்லரத்தினம் அவர்களை மண்முனை தென்மேற்கு கோட்ட கோட்டக்கல்விப் பணிப்பாளர், அதிபர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். 

மேலும் மட்டக்களப்பு மேற்கு கல்வி விளையாட்டு செயற்பாட்டுக்காக  உதவியும் குறித்த வழங்கப்பட்டது. 

இடம்பெற்ற  நிகழ்வில்  மட்டக்களப்பு மேற்கு வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் வை.சி.சஜீவன், மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் மூ. உதயகுமாரன், பாடசாலைகளின் அதிபர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.













 

SHARE

Author: verified_user

0 Comments: