22 Sept 2025

10 வது கண்ணகி கலை இலக்கிய விழா – 2025

SHARE

10 வது கண்ணகி கலை இலக்கிய விழா – 2025

10 வது கண்ணகி கலை இலக்கிய விழா – 2025  மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மென் மேற்கு பிரதேசத்தில் எதிர்வரும் 25, 26, 27, மற்றும் 28 ஆகிய 4 தினங்கள் நடைபெறவுள்ளதாக கண்ணகி கலை இலக்கியக் கூடல் தெரிவித்துள்ளனர். 

இதன்போது தமிழரின் பாரம்பரியங்களையும், கண்ணகி வழிபாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் தமிழர்கள் ஆதிகாலம் தொடக்கம் கடைப்பிடித்து வரும் போர்த்தேங்காய் அடித்தல், கொம்பு முறி விழா, கொம்புமுறி விளையாட்டு, பண்பாட்டு பவனி, பட்டிமன்றம், கலை ஆய்வரங்கு, கூத்துக்களரி,  போன்ற பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. 

இதில் சமயத் தலைவர்கள் வைத்தியர்கள், எழுததளர்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், சைவப் புலவர்கள், என ஏராளமானோர் கலந்து கொள்ளவுள்ளதாக கண்ணகி கலை இலக்கியக் கூடல் மேலும் தெரிவித்துள்ளனர்.


 

SHARE

Author: verified_user

0 Comments: