மட்டக்களப்பு வாவியில் மூழ்கி குடும்பஸ்தர்
பலி.
மட்டக்களப்பு வாவியின் மண்முனைப் பகுதியில் வைத்து வலை வீசி மீன் பிடிப்பதற்காக வியாழக்கிழமை(28.08.2025) ஆற்றில் இறங்கிய குறித்த நபர் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்குள் தவறுதலாக சென்றதால் அதிலிருந்து மீளமுடியாமல் காணாமல் போயிருந்தார்.
உறவினர்களும் பொதுமக்களும் பொலிசார் இணைந்து தேடுதலில் ஈடுபட்டபோதும் குறித்த நபர் சடலமாகவே மீட்கப்பட்டுள்ளார்.
கோவில் குளம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய கறுவல்தம்பி தங்கவேல் என்பவரே உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற திடீர் மரண விசாரணை அதிகாரி வடிவேல் மணிகரன் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார். மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment