24 Jul 2025

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏத்தாலைக்குளம் பறவைகள் சரணாலயத்தில் தீப்பரவல்.

SHARE

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏத்தாலைக்குளம் பறவைகள் சரணாலயத்தில் தீப்பரவல்.

மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் ஏத்தாலைக்குளம் பறவைகள் சரணாலயத்தில் வியாழக்கிழமை (24.07.2025) மாலை வேளையில் தீ பரவல் சம்பவம் பதிவாகியுள்ளது. 

மெதுமெதுவாக பரவ ஆரம்பித்த தீ சரணாலயத்தை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. பின்னர் தீப்பரவல் சம்பவத்தினை கட்டுப்படுத்துவதற்காக? குருக்கள்மடம் வடக்கு கிராம சேவை உத்தியோகத்தர், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் ஊடாக தீச்சம்பவத்தை கட்டுப்படுத்த களுவாஞ்சிக்குடி பொலிஸாருடன் இணைந்நு குருக்கள்மடம் இராணுவத்தினர், பொதுமக்கள், பல்வேறு பிரயத்தனங்களுக்கு மத்தியில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

மட்டக்களப்பு குருக்கள்மடம் பறவைகள் சரணாலயம் கடந்த வருடம் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பறவைகள் சரணாலயமாக பிரகடனப்படுத்தப்பட்டதுடன் கிழக்கு மாகாணத்தில் முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாக இது காணப்படுகிறது. இதேபோல் கடந்த ஆண்டும் 27.09.2024 திகதியில் பாரியளவு, தீப்பரவல் இதேகுருக்கள்மடம் ஏத்தாலைக்குள பறவைகள் சரணாலயத்தில் ஏற்பட்டிருந்தது. 

மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் கண்காணிப்பின் கண்காணிக்கப்பட்டு வருகின்ற இப்பறவைகள் சரணாலயத்திற்கு இலட்ச கணக்கிலான உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் வருகை தருகின்றன. இதனால் இப்பறவைகளின் நிலைத்திருப்பிற்கு இச் சம்பவம் சிக்கலானதாக அமைந்ததாக சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர். 

இச்சந்தர்ப்பத்தில் பறவைகள் எதற்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பேராபத்து வராமல் பாதுகாக்கப்பட்டுள்ளன. இச்செயற்பாடு தொடர்ந்த வண்ணம் உள்ளதாகவும், இவ்வாறு பாதுகாக்கப்பட்ட பிரதேசத்திற்குள் அனுமதி இன்றி உள் நுழைந்து, தீயை ஏற்படுத்தியவர்கள், சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும் எனவும் கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.

 


















SHARE

Author: verified_user

0 Comments: