தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் வாக்களிப்பு
நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
செவ்வாய்கிழமை(06.05.2025) இடம் பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளும் வாக்குச் சீட்டுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான தேர்தல் மத்திய நிலையமான மட்டக்களப்பு இந்துக்கல்லூரி வளாகத்தில் இருந்து திங்கட்கிழமை பலத்த பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 உள்ளுராட்சிசபைகளுக்காக இடம்பெறவுள்ள இந்த தேர்தலில் இம்முறை மாவட்டத்தில் 447 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் தேர்தல் பணிகளுக்காக 6000 அரச ஊழியர்களும் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொலிசாரும் இம்முறை தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டத்தின் தேர்தல் வாக்குகளை எண்ணுவதற்காக 144 வட்டார வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
0 Comments:
Post a Comment