மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இம்முறை
455,520 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
12 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இம்முறை 455,520 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்களிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 477 வாக்களிப்பு நிலையங்கள் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டுள்ளதான மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் , மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி.ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்துள்ளார். இதவ்விடையம் தொடர்பில் திங்கட்கிழமை(05.05.2025) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
நடைபெற இருக்கும் உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்கான சகவ பூர்வாங்கப் பணிகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன. இம்முறை சுமார் 6000 அரசாங்க உத்தியோகஸ்தர்கள் இந்த தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அது மாத்திரம் இன்றி பொலிஸ் மற்றும் இராணுவ உத்தியோகஸ்தர்களும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கான தெளிவூட்டல்கள், மற்றம் வழிகாட்டல் வகுப்புகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் திங்கட்கிழமை வாக்குச்சாவடிகளுக்கான வாக்குப்பெட்டிகள் சிரேஷ்ட தலைமை தாங்கும் உத்தியோகத்தர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாநகர சபை காத்தான்குடி மற்றும் நகர சபை மற்றும் ஏனைய ஒன்பது பிரதேச சபைகள் அடங்கலாக 12 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இம்முறை 455,520 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்களிப்பதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 477 வாக்களிப்பு நிலையங்கள் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டுள்ளன எனவே செவ்வாய்கிழமை நடைபெறும் வாக்களிப்புக்காக காலை ஏழு மணி முதல் பொதுமக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்கலாம்.
வாக்களிப்பு நடவடிக்கைகள் செவ்வாய்கிழமை
பிற்பகல் 4 மணிக்கு முடிவடையும். அதன் பின்னர் 4.30 மணியிலிருந்து வாக்கெண்ணும் பணிகள்
ஆரம்பமாகும். வாக்கெண்ணும் பணிகளுக்காக 144 நிலையங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை மட்டக்களப்பு
மாவட்டத்தில் எந்த ஒரு தேர்தல் வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை தேர்தல் விதிமுறை
சம்பவங்கள் 353 சம்பவங்கள் பதிவாகி உள்ளன என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment