23 Apr 2025

பிரதேச மக்களுக்கு உதவும்வகையில் வவுணதீவுப் பிரதேசத்தில் உதவு ஊக்க மையம் திறந்து வைப்பு.

SHARE

பிரதேச மக்களுக்கு உதவும்வகையில் வவுணதீவுப் பிரதேசத்தில் உதவு ஊக்க மையம் திறந்து வைப்பு.                                                                                         

பிரதேச மக்களுக்குஉதவும் வகையில்,வவுணதீவுப் பிரதேசத்தில்உதவு ஊக்கமையம் திறந்துவைக்கப்பட்டுள்ளதாக சேர்க்கிள் (CIRCLE)எனப்படும் இளம்பெண்கள் அமைப்பின்அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அஜானிகாசிநாதர் தெரிவித்தார். வவுணதீவு பிரதேச செயலாளர்பிரிவிலுள்ள வவுணதீவு, கல்குடா நரிப்புல்தோட்டம் மகிழவெட்டுவான் ஆகியகிராமங்களில்  பாதிக்கப்பட்ட பெண்கள்,இளைஞர்கள், யுவதிகளைஉள்ளடக்கி அப்பிரதேசபரிந்துரை வலையமைப்பின் ஊடாகஆரம்பித்து வைக்கப்பட்டகணனிப் பயிற்சி,காகிதாதிகள் விற்பனை,போட்டோ கொப்பி,பிரின்ரிங் உட்பட உள்ளுர்உற்பத்திப் பொருட்கள்  விற்பனை நிலையம்

திங்கட்கிழமை (21.04.2025)  திறந்துவைத்து பயனாளிகளிடம்கையளிக்கும் நிகழ்வுஇடம்பெற்றுள்ளது.

இங்கு “பொன்நிறுவனத்தின் நிதிஅனுசரணையில் சேர்க்கிள்நிறுவனத்தின் அமுலாக்கத்தில்சுமார் 5 இலட்சரூபாய் பெறுமதியானஉபகரணத் தொகுதிகள்பிரதேச பரிந்துரைப்புக்குழுவிடம் வழங்கிவைக்கப்பட்டன. நிகழ்வில் உரையாற்றியசேர்க்கிள் இளம்பெண்கள் அமைப்பின்அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் அஜானி, சேர்க்கிள் அமைப்பினால் மாவட்டத்திலுள்ள ஏறாவூர்ப்பற்று, கோறளைப்பற்றுமத்தி வாழைச்சேனை,வவுணதீவு ஆகியமூன்று பிரதேசசெயலாளர் பிரிவுகளில்இளைஞர், யுவதிகள்,பெண்கள் ஆகியோரிடையேநிலவும் தொழிலில்லாப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காகஇத்தகைய வாழ்வாதாரத்திற்கான தொழிலூக்க உதவிகள்வழங்கப்பட்டு வருகின்றன.

நாம் தொடர்ந்துமுயற்சியைக் கைவிடாமல்இந்தப் பிரதேசமக்களுக்கான உதவிகளைமக்களின் காலடிக்குக்கொண்டு வந்துசேர்ப்பிப்பதில் உறுதியாகஇருந்தோம். அதுஇப்பொழுது நிறைவேற்றப்பட்டிருக்கிறது.எனவே இவற்றைப்பாதுகாத்து இத்திட்டத்தை முன்கொண்டுசெல்ல வேண்டியதுபிரதேச மக்களின்பொறுப்பாகும். இதன் நோக்கம்பரிந்துரை வலையமைப்புதொடர்ந்து இயங்கிஅதனூடாக பெண்கள்,இளைஞர், யுவதிகளின்வேலையில்லாப் பிரச்சினைதீர்க்கப்பட வேண்டும்,பிரதேச மக்களின்பொருளாதாரம் வளமடையவேண்டும், வாழ்வாதாரம் சிறப்படையவேண்டும் என்பதேயாகும்.”என்றார்.

நிகழ்வில் மகிழவெட்டுவான்கந்தப்போடி வித்தியாலயத்தின்அதிபர் வி.ஏரம்பமூர்த்தி, நரிப்புல்தோட்டம்நடேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபர் வி.மாதவன், சேர்க்கிள் நிறுவனத்தினால்உருவாக்கப்பட்ட ஏறாவூர்ப்பற்று,கோறளைப்பற்று மத்திவாழைச்சேனை, வவுணதீவுஆகிய பிரதேசங்களிலுள்ள   பரிந்துரை வலையமைப்பின்உறுப்பினர்கள், சேர்க்கிள் இளம்பெண்கள் அமைப்பின்வெளிக்கள இணைப்பாளர்களான  கே.ஜெயவாணி,எம்.எல்.மாஜிதா, கே.லக்ஷானா ஆகியோருட்பட   பரிந்துரை வலையமைப்பிலுள்ள பயனாளிகளும் கலந்து கொண்டனர்.














SHARE

Author: verified_user

0 Comments: