14 Apr 2025

காட்டுயானை தாக்குதலுக்கிலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

SHARE

காட்டுயானை தாக்குதலுக்கிலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

மட்டக்களப்பு போரதீவுப்பற்று, வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (13.04.2025) காட்டு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக ஒருவர் உயிரிழந்துள்ளார். 

மூன்று பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடைய இராசதுரை ரஜீகரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு காட்டுயானையின் தாக்குதலுக்கிலக்காகிய நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். 

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் மிக நீண்டகாரமாகவிருந்து இவ்வாறு காட்டுயானைகளின் தாக்குதல்களும், அட்டகாசங்களும் அதிகரித்தவண்ணமுள்ளன. எனினும் இதற்கு துறைசார்ந்தோர் நிரந்தர தீர்வை முன் வைக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.








SHARE

Author: verified_user

0 Comments: