கொட்டும் கடும் மழைக்கு மத்தியில் நடந்தேறிய
தேற்றாத்தீவு மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர்
திறனாய்வுப் போட்டி.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குபட்பட்ட தேற்றாத்தீவு மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி
பாடசாலை விளையாட்டு மைதானம் செவ்வாய்கிழமை(11.03.2025) வித்தியாலய முதல்வர் த.தேவராசா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன், பட்டிருப்பு கல்வி வலய கல்விப் பணிப்பாளர் உசி.சிறீதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
நாவலர், புலவர்மணி, விபுலானந்தர், என மூன்று இல்லங்களாக பிரிக்கப்பட்டு மாணவர்களின் திறனாய்வு போட்டிகள் இடம்பெற்றன.
இதப்போது மேலும் அதிதிகள் மலர்மாலை அணிவித்து பாண்டு வாத்தியங்கள் முழங்க வரவேற்கப்பட்டு தேசியக்கொடி, பாடசாலை கொடி, இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு பின்னர், இறைவணக்கம், ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல், மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி, மாணவர்களின் அணிநடை மரியாதை, சுவட்டு அஞ்சல் நிகழ்ச்சிகள், போன்றன நிகழ்வை அலங்கரித்தன. இதன்போது வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வெற்றி கேடயங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது மேலும் போரதீவுபற்று கோட்டக்கல்வி பணிப்பாளர் த.அருள்ராசா, பட்டிருப்பு கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் எஸ்.திவிதரன், எஸ்.சுரேஸ் பல அதிகாரிகளும் பொதுமக்கள், பழைய மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment