கிழக்கு தமிழர்களுக்கென்று தலைமைத்துவம்
இல்லாத காரணத்தினால் கிழக்குத் தமிழர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
வருகின்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலிலே நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியம் கிழக்கு தமிழர் கூட்டமைப்புக்கு எமது பூரண ஒத்துழைப்பினை வழங்குவது என நாம் தீர்மானம் எடுத்துள்ளோம்.
என நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தின் செயலாளர் கோபாலன் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளியில் ஞாயிற்றுக்கிழமை(23.03.2025) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில் .....
வடமாகண மக்களுக்கென பல தலைவர்களும், பல அரசியல் கட்சிகளும், அங்கு இருக்கின்றார்கள். அந்த தலைவர்களாலும் அந்த கட்சிகளாலும், அந்த மண்ணும், மக்களும், பாதுகாக்கப்படுகின்றார்கள். அதேபோல் மலைக தமிழ்களுக்கும் தலைவர்கள் இருந்து செயற்பட்டு வருகின்றார்கள். ஆனால் கிழக்கு தமிழர்களுக்கென்று தலைமைத்துவம் இல்லாத காரணத்தினால் கிழக்குத் தமிழர்கள் தத்தளித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதன் அடிப்படையிலேயே கிழக்குத் தமிழர்களை பாதுகாப்பதற்காக தற்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் அவர்களும், முற்போக்கு தமிழர் கழகத்தினுடைய ஒருங்கிணைப்பாளர் வியாழேந்திரன் அவர்களும் இணைந்திருக்கின்றார்கள். இந்த இணைவு உண்மையில் கிழக்கு மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்த இணைவினூடாக நடைபெறப் போகின்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் அனைவரும் படகு சின்னத்தை ஆதரித்து தத்தளித்து கொண்டிருக்கின்ற தமிழர்களை கரைசேர்ப்பதற்கு நிச்சயமாக ஆதரவு வழங்குவார்கள் என நான் நினைக்கின்றேன்.
நாம் தமிழர் அமைப்பு என்ற அமைப்பை முள்ளிவாய்க்கால் மண்ணிலேயே தான் நாங்கள் இதனை ஆரம்பித்தோம். அன்றிலிருந்து எமது அமைப்பு வடகிழக்கு தமிழர்களுக்கு என்று பல போராட்டங்களையும், சேவைகளையும், செய்து வருகின்றோம். இந்த நிலையில்தான் கிழக்கு தமிழர்களை பாதுகாப்பதற்கு என்றே இங்கு யாரும் இல்லாத நிலை இருந்து கொண்டிருக்கின்றது. ஆகையால்தான் கிழக்குத் தலைவர்கள் இணைந்திருக்கின்றார்கள். இந்த இணைவு எமக்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஆகவே நடைபெற இருக்கின்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அனைத்து மக்களும் படகு சின்னத்தை ஆதரிக்குமாறு நாங்கள் அன்பாக கேட்டு நிற்கின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இலங்கை தமிழரசு கட்சி மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கின்றது. அவர்கள் தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. ஊழலற்ற அபிவிருத்தியை நாங்கள் செய்வோம். ஏன் என்றால் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருகின்றோம் என்றார்கள், மேச்சல்தரை பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு பெற்று தருவோம் என்றார்கள், ஆனால் எதுவும் நடைபெறவில்லை.
அவர்கள் பாராளுமன்றம் சென்று பிள்ளையாளைப் பற்றித்தான் பேசுகிறார்கள். ஆனால் மாற்று சமூகத்தினர் 27 குடும்பங்களுக்கு ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவையே ஆரம்பித்திருக்கின்றார்கள்.
எனவே அவர்கள் போலியாக மக்களை ஏமாற்றி வாக்குகளை மக்களிடம் இருந்து பெற்றிருக்கின்றார்கள். வடக்கில் மக்கள் யாரை தெரிவு செய்தாலும் அங்கு தமிழர்கள் வடக்கு ஆளக்கூடிய நிலைமை இருக்கின்றது. கிழக்கு அவ்வாறு இல்லை ஏனைய சமூகங்கள் பொருளாதாரத்தில் அபிவிருத்தியிலும் முன்னோக்கி இருக்கின்றார்கள். ஏனெனில் அவர்களுடைய தலைமைகள் நன்றாக செயற்படுகின்றார்கள் இந்நிலையில்தான் வேறுபட்டிருந்தவர்கள் கிழக்கில் ஒன்று பட்டிருக்கின்றார்கள். எனவே போலித் தேசியவாதிகளின் வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாந்து போகாமல் வருகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பது உள்ளுர் தலைவர்களை உருவாக்குகின்ற தேர்தலாகும்.
எனவே கிழக்கில் தமிழ் கூட்டமைப்பாக படகு சின்த்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கிழக்கை கிழக்கு தமிழர்கள் ஆளக்கூடிய உள்ளுர் தலைவர்களை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment