கராத்தே பயிற்சி மாணவர்களுக்கு சான்றிதழ்
வழங்கும்நிகழ்வு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கராத்தே துறையில் உள்ள மாணவர்களின் திறiமைகளை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தும் நோக்குடன் எஸ்கேஓ கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கராத்தே குழாம் அமைப்பின் ஆதரவுடன் நடைபெற்ற இரண்டு நாள் கராத்தே பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு வின்சென்ட் தேசிய பாடசாலையில் ஞாயிற்றுக்கிழமை(02.03.2025) நடைபெற்றது.
பிரிட்ஸில் அகாடமி நிறுவனரும் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கராத்தே சாம்பியன்சிப் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட உலக புகழ் பெற்ற கராத்தே சாம்பியனுமான சு.கணேசலிங்கம் அவர்களின் தமைமையில் நடைபெற்ற குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற 500 மாணவர்களுக்கு சர்வதேச தரத்திலான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு கராத்தே குழாம் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்திருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கராத்தே துறையில் பல மாணவர்கள் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சாதனைபடைக்க கரணமாக செயற்பட்டு வரும் எஸ்கேஓ கழகத்தினருடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கராத்தே துறைக்கு மேலும் வலுச்சேர்க்கும் நோக்குடனும் கராத்தே துறையில் உள்ள மாணவர்களை சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தும் நோக்குடனும் கடந்த 2021 ஆம் ஆண்டு சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு கராத்தே குழாம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மட்டக்களப்பு எஸ்கேஓ கழகமும் மட்டக்களப்பு கராத்தே குழாம் அமைப்பினரும் இணைந்து குறித்த பயிற்சி முகாமை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது எஸ்கேஓ கழக நிறுவுனரும் பிரதான போதனாசிரியருமான கே.ரி.பிரகாஷ், வின்சன் மகளிர் தேசிய பாடசாலை அதிபர் பாஸ்கரன், பிரதி அதிபர் நிர்மலன் எஸ்கேஓ போதனாசிரியர்களான டேவிட், கணேசலிங்கம், நிஷா, சசி உட்பட பயிற்சி முகாமில் பங்குபற்றிய மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment