பல்கலைகழக மாணவர்களின் 14வது விருது வழங்கும் விழா.
பல்கலைக் கழகங்களில் மருத்துவ மற்றும்
பொறியியல் பீடங்களில் கல்வி பயிலும், மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(02.03.2025) செட்டிபாளையம்
மகா வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
செட்டிபாளையம் மகா வித்தியாலய அதிபர் தலைமையில் ரி.அருள்ராஜா நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியா நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் கே.மகேசன் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது பல்கலைக் கழகங்களில் மருத்துவ மற்றும் பொறியியல் பீடங்களில் கல்வி பயிலும், மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது மேலும் மட்டக்களப்பு கல்வி வலய வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் கே.அர்ச்சனா கே.ஹரிஹரராஜ், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இப் புலமைப்பரிசில் உதவிகளை சிவகாமி அறக்கட்டளை, லண்டன், ரெயின்போ பவுண்டேஷன், சிவலிங்கம் அறக்கட்டளை, லண்டன், சோமாஸ்கந்தன், கான்பெரா ஆஸ்திரேலியா, வை. கிரிசாந்த், கே.அர்ச்சோபனா, உள்ளிட்ட பலர் வழங்கியிருந்தனர்.
0 Comments:
Post a Comment